அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம்!
தூத்துக்குடி பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம்;
திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து துறை ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் அதற்கும் செவி சாய்க்காவிட்டால் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் அவர்கள் தெரிவித்தனர். அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் காரணமாக வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது