காங்கேயம் போலீஸ் நிலைய கட்டிடத்திற்கு சொத்து வரி 24 லட்சம் நிலுவை
காங்கேயம் போலீஸ் நிலைய கட்டிடத்துக்கு சொத்துவரி ரூ.24 லட்சம் நிலுவை விரைவாக செலுத்துமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு நகராட்சி ஆணையாளர் கடிதம்;
காங்கேயம் நகராட்சி ஆணையர் பால்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது:- காங்கேயம் போலீஸ் நிலையம், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி முதல் புதிய கட்டிடத்தில் செயல்படுகிறது. இந்த கட்டிடத்திற்கு, 2022-23-ம் முதலாம் அரையாண்டு முதல் 2025-26-ம் நிதியாண்டின் 2-வது அரையாண்டு வரை சொத்துவரி செலுத்த வேண்டியுள்ளது. அதன்படி மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 845 நிலுவை உள்ளது. இந்த தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.