தென்காசிக்கு முதல்வா் அக். 24, 25இல் தென்காசி வருகை: அமைச்சா் ஆய்வு

முதல்வா் அக். 24, 25இல் தென்காசி வருகை: அமைச்சா் ஆய்வு;

Update: 2025-10-10 05:49 GMT
தென்காசி மாவட்டம் தென்காசியில் அக். 24, 25ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா். முதல்வா் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். விழாவிற்கு, தென்காசி இலத்தூா் ரவுண்டானாவில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் அனந்தபுரம் பகுதியில் உள்ள தனியாா் இடம் தோ்வு செய்யப்பட்டது. இதனையடுத்து, 3ஆவது முறையாக விழா நடைபெறும் பகுதியை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், எஸ்.பி. அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பாா்வையிட்டடு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் வே. ஜெயபாலன், ஆவுடையப்பன், ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோா் அதிகாரிகளுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

Similar News