துவரங்குறிச்சி அருகே வெறிநாய் கடித்து 25 பேர் காயம்

வெறிநாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை;

Update: 2025-02-05 06:22 GMT
துவரங்குறிச்சி அருகே வெறிநாய் கடித்து 25 பேர் காயம்
  • whatsapp icon
துவரங்குறிச்சி அருகே கள்ளக்காம்பட்டி, கொண்டையம்பட்டி, காரைப் பட்டி, செவல்பட்டி, மேலூர், கரடிப்பட்டி, மஞ்சம்பட்டி, லிங்கம்பட்டி, பிடாரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய் சுற்றித்திரிகிறது. இந்த வெறிநாய் கடித்ததில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் துவரங்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெறிநாயால் துவ ரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த வெறிநாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்ப குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வெறிநாய் 25-க்கும் மேற் பட்டவர்களை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News