கரூர் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்.
கரூர் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்.;
கரூர் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது பணியாளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி எவ்வித நிபந்தனையும் இல்லாமல் 20% மோதிய உயர்வுடன் ஏற்கனவே வழங்கிய 10% வழங்க கோரியும் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். கருணை ஓய்வூதியத்தை ரூபாய் ஐந்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேரும் விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கணினி பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முறையற்ற பங்குத் தொகை வசூலிப்பு போன்ற மத்திய வங்கியின் சுரண்டல் போக்கினை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளது.