நகை 25 பவுன் திருட்டு வழக்கில் ஒருவன் கைது

குமாரபாளையத்தில் வீட்டில் நகை 25 பவுன் திருடப்பட்ட வழக்கில் ஒருவன் கைது செய்யப்பட்டான்.;

Update: 2025-12-01 14:57 GMT
குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் வசிப்பவர் நாகராஜ், 41. லேத் பட்டறை தொழில். இவர் குடும்பத்துடன் சேலம் சென்று விட்டு நவ. 28ல், காலை 08:00 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டு, 25 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து விசாரணை செய்து வந்தனர். அக்கம் பக்கம் உள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் ஒருவனை கைது செய்தனர்.குமாரபாளையம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும் படும் வகையில் நின்றிருந்த ஒருவன் வசம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவன்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், சீர்காழியை சேர்ந்த விஜயபாஸ்கர், 30, என்பதும், பல்வேறு மாவட்டங்களில் இது போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது

Similar News