ஜூலை. 25க்கு பதிலாக ஆக. 2ல் மாதந்திர மின் பராமரிப்பு செய்ய கோரிக்கை

குமாரபாளையத்தில் ஜூலை. 25ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு மின் தடை செய்வதாக மின்வாரியத்தினர் கூறியுள்ளதை, ஆக. 2ல் மாற்றியமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-24 13:34 GMT
குமாரபாளையத்தில் ஜூலை. 25ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு மின் தடை செய்வதாக மின்வாரியத்தினர் கூறியுள்ளதை, ஆக. 2ல் மாற்றியமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது: குமாரபாளையத்தில் ஜூலை. 25 மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு மின் தடை செய்வதாக மின்வாரியத்தினர் கூறியுள்ளனர். ஆடி அமாவாசை நாளில் கூட மின் தடை செய்து இருக்கலாம். அனைத்து விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்களுக்கு விடுமுறை நாள் ஆகும். ஜூலை. 25 அவர்கள் வேலைக்கு வரும் நாள். ஏற்கனவே தொழில் நிலை சரியில்லாமல், கிட்னி விற்கும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருமானம் பாதிக்கும் வகையில் ஜூலை. 25ல் மின் தடை செய்தால், தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் சூழ்நிலை வரும். இதற்கு பதிலாக, ஆக. 2ல் மின் தடை செய்தால் கூட, மறுநாள் ஆக. 3ல், ஆடி. 18 ஆடிப்பெருக்கு திருவிழா தான். முதல் நாளான ஆக. 2ல் விசைத்தறி பட்டறையை தூய்மை படுத்தும் பணிதான் செய்வார்கள். அன்று கூட பராமரிப்பு பணி மின் நிறுத்தம் செய்து கொள்ளலாம். இது பெரும்பாலான தொழிலாளர்கள் கருத்தும் ஆகும். மின் வாரிய அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News