தென்னடார் கிராமத்தில் ரூ.250 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை

உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என திமுக நிர்வாகி தகவல்;

Update: 2025-03-19 12:14 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் வே.முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தென்னாடர் கிராமத்தில், 450 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், ரூ.280 கோடியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோருக்கு, வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், தென்னடார் கிராமத்தில், சிப்காட் தொழிற்சாலை அமைப்பதால், கிராம முன்னேற்றம் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள், உள்ளிட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மேம்பட, சாலை வசதி, உள்கட்டமைப்பு, வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இத்திட்டம் குறித்த பயன்கள், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தொழிற்சாலை ஏற்படுத்துதல், உள்ளூர் மக்களே சிப்காட் தொழிற்சாலையில் தொழில் செய்ய முன்னுரிமை வழங்குதல், மேலும் இளைஞர்கள், இளம் பெண்கள், சிப்காட் தொழிப்பேட்டையில் தொழில்கள் நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், இப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோர்களும் பங்கு எடுத்து தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படும். இதனால் உள்ளூர் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கிராம மக்களின் பொருளாதாரம் உயரும். சிப்காட் தொழிற்சாலை வருவதால் தொழில்துறையில், உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகாரிக்கும். வேதாரண்யம் தாலுகா தென்னடார் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தென்னடார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில்பொதுமக்களை வீடுவீடாக சந்தித்து திண்ணை பிராச்சாரம் தொடங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News