ராசிபுரம் அருகே ரூ.25.70 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்க விழா: கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தொடங்கி வைத்தார்..
ராசிபுரம் அருகே ரூ.25.70 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்க விழா: கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தொடங்கி வைத்தார்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் குருக்கப்புரம் ஊராட்சி சக்திநகர் பகுதியில் ரூ.25.70 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கான பூமிபூஜை விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சக்திநகர் மயானச்சாலை ரூ.8.80 லட்சம் மதிப்பிலும், சக்திநகர் தெற்கு சாலை ரூ.16.90 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 25.70 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கே.பி.ஜெகந்நாதன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன், உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.