காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் 2600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட "வெற்றிக்கு வித்திடுவோம்" நிகழ்ச்சி முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்புரை
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 43 பள்ளிகளில் இருந்து 2600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட "வெற்றிக்கு வித்திடுவோம்" நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே உற்சாகமாக சிறப்பு உரையாற்றினார்.
காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் செயல்பட்டு வரும் காங்கேயம் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் கல்லூரி மற்றும் ரோட்டரி காங்கேயம் டவுன் சார்பில் "வெற்றிக்கு வித்திடுவோம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் கலந்து கொண்டார். சைலேந்திரபாபு ஐபிஎஸ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். காங்கேயம் பகுதிகளில் செயல்படும் 43 பள்ளிகளில் இருந்து 2600 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களிடையே பேசிய சைலேந்திரபாபு மனிதனை சிந்திக்க செய்வதும், தனிமனித வாழ்வை சிறக்க செய்வதும் கல்வி என்றும், லட்சியங்கள், எண்ணங்கள் நிறைவேறும் நாளே சிறந்த நாள் என தெரிவித்தார்.நேர்மறை எண்ணங்களை அணுகுமுறை ஆக்குதல் குறித்து "அச்சம் தவிர் அறிவைப் பெருக்கு" என்றும் நேர மேலாண்மை குறித்தும் சிறப்புரை ஆற்றினார் . மேலும் நிகழ்ச்சியின் போது மாணவ மாணவிகளிடையே கேள்விகள் கேட்டு அதற்கு சரியான பதில் அளிக்கும் மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினார். 2024 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒவ்வொரு பள்ளிகளின் முதல் மூன்று மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அதிக மதிப்பெண் பெற பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளிடையே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது குறித்தும் சிறப்புரைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ரோட்டரி காங்கேயம் டவுன் நிர்வாகிகள், ரோட்டரி திருப்பூர் மாவட்ட கவர்னர் Dr.சுரேஷ் பாபு,அஸ்வின் , காங்கேயம் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடாசலம், தாளாளர் ஆனந்த வடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம், ஒளிரும் ஈரோடு அமைப்பின் நிறுவனர் சின்னசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் விழா முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.