விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26000/- வழங்கிட வேண்டும்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடு வேண்டும் உள்ளிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.;

Update: 2025-07-20 14:47 GMT
பெரம்பலூர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தரை வார்ப்பதை கைவிட வேண்டும் என சிஐடியு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல். பெரம்பலூர் மாவட்ட குழு 9 வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் தனியார் மண்டபத்தில் இன்று மாவட்ட தலைவர் A. ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை மாநில செயலாளர் சி. ஜெயபால் துவக்கி வைத்தார். ஸ்தாபன வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ். அகஸ்டின் சமர்ப்பித்தார். வரவு செலவு அறையை பி. ரெங்கராஜ் சமர்ப்பித்தார். தீர்மானங்களை மாவட்ட துணை செயலாளர் கே. மணிமேகலை முன்மொழிய மாவட்ட துணை செயலாளர் பி . ஆறுமுகம் அவர்கள் வழிமொழிந்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர் எம். கருணாநிதி நிறைவேற்றினார். மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் ஜி.செல்வி நன்றி உரையாற்றினார். மாநாட்டில் ஒருங்கிணைப்பு குழு கன்வினராக S. அகஸ்டின், நிதி பராமரிப்பாளராக G. செல்வி,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக ஏ. ரெங்கநாதன், பி ரெங்கராஜ், கே. மணிமேகலை, எம். கருணாநிதி, M.பன்னீர்செல்வம், பி. குணசேகரன் ,கே முத்துகிருஷ்ணன் அடங்கிய 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிஐடியூ மாநில மாநாடு பிரதிநிதிகளாக எஸ். அகஸ்டின் ,ஜி. செல்வி, A. ரெங்கநாதன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26000/- வழங்கிட வேண்டும். திட்ட ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்திட, நலவாரிய குறைபாடுகளை களைந்து பணப்பயன்களை விரைந்து வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடு வேண்டும் உள்ளிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News