வாங்கல் அருகே சட்டவிரோத மது விற்பனை. 27 மது பாட்டில்கள் பறிமுதல்.

வாங்கல் அருகே சட்டவிரோத மது விற்பனை. 27 மது பாட்டில்கள் பறிமுதல்.

Update: 2025-01-02 13:00 GMT
வாங்கல் அருகே சட்டவிரோத மது விற்பனை. 27 மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 1ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பது தெரிய வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார், அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில், கீழரத வீதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராமமூர்த்தி வயது 40 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 27 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News