மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தகவல்.

மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். ------;

Update: 2025-03-19 18:09 GMT
பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.02.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கிவைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 27 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், பந்தல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்இ மெயின் பஜார்(75989-65052), திருவில்லிபுத்தூர் பஞ்சாயத்து யூனியன் மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம், வன்னியம்பட்டி விலக்கு(80566-45384), மாத்திநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சூலக்கரை(86104-97590), மேட்டமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாத்தூர்(63807-88272), முகவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சேத்தூர் மெயின் ரோடு, இராஜபாளையம்(76391-15145), பாட்டக்குளம் சல்லிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணன்கோவில்(73973-06344), சத்திரப்பட்டி ஆலங்குளம் சாலை, அய்யனாபுரம் (88258-14836), சிவகாசி பொது அலுவலர் கூட்டுறவு பண்டகசாலை, ஆனையூர்(80152-28861), அருணாச்சலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எம்.ரெட்டியப்பட்டி(91597-91469), வீரசோழன் கூட்டுறவு பண்டகசாலை, வீரசோழன்(93847-16303), கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிருஷ்ணாபுரம்(97863-36396), கொல்லபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மெயின்ரோடு, சாத்தூர்(74492-35707), விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, அல்லம்பட்டி (80726-54056), தாயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தாயில்பட்டி (98436-52835), மல்லாங்கிணர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மல்லாங்கிணர்(81247-37854), வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டகசாலை, வத்திராயிருப்பு (99948-23272), விருதுநகர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, லட்சுமி நகர், விருதுநகர்(87786-53291), எம்.ஜெயக்கவிதா, தெற்கு தெரு, அருப்புக்கோட்டை(98424-04312), எம்.ராமராஜ், பந்தல்குடி சாலை, அருப்புக்கோட்டை (90805-39436), பி.முருகேஸ்வரி காமராஜ் நகர், இராஜபாளையம்(97882-23277), ஜெ.சுகிர்தராணி, மெயின் ரோடு, மேலையூர்(81109-43955), பெனாசீர், மதுரை மெயின்ரோடு, திருவில்லிபுத்தூர்(96265-65454), எஸ்.அண்ணாமலை சிவகாசி மெயின்ரோடு, எம்.புதுப்பட்டி(99433-01553), ஜி.சுமதி, செங்கமலநாச்சியார்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்(85086-47984), எம்.போஸ் அழகாபுரி, இராஜபாளையம்(99768-98818), எ.முத்துசெல்வி, அம்மன்கோவில்பட்டி, வெள்;ர்(90956-06012), ஜி.ஜெயந்தி, முடங்கியார் ரோடு, இராஜபாளையம்(97916-63020) ஆகிய 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முதல்வர் மருந்தகங்களின் மருந்துகள் சந்தை விலையைவிட 75 சதவீதம் விலை குறைவாகவும், கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், ஜெனரிக், பிராண்டட், சித்தா, ஆயுர்வேதம், யுனானி டாம்க்கால் மற்றும் சர்ஜிக்கல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கிடைக்கும். எனவே, இதனை பொதுமக்கள் பெற்று பயன்பெறுமாறு மாவட்;ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News