வெங்கமேடு அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.27- மது பாட்டில்கள் பறிமுதல்.
வெங்கமேடு அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.27- மது பாட்டில்கள் பறிமுதல்.;
வெங்கமேடு அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.27- மது பாட்டில்கள் பறிமுதல். வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆர்த்திக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5 மணி அளவில், வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வெங்கமேடு அருகே செயல்படும் டால்பின் தாபா பின்புறம் சட்ட விரோத மது விற்பனை நடப்பது அறிந்து, இந்த விற்பனையில் ஈடுபட்ட கரூர், பொய்யாமணி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 35 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 27 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.