கரூர் அருள் மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மகா அபிஷேக குழு சார்பில் நடைபெற்ற 27 - ஆம் ஆண்டு தெய்வ திருமண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
கரூர் அருள் மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மகா அபிஷேக குழு சார்பில் நடைபெற்ற 27 - ஆம் ஆண்டு தெய்வ திருமண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
கரூர் அருள் மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மகா அபிஷேக குழு சார்பில் நடைபெற்ற 27 - ஆம் ஆண்டு தெய்வ திருமண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மகா அபிஷேக குழு சார்பில் 27 - ஆம் ஆண்டு தெய்வ திருமண விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 31-ம் தேதி கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தகால் நடும் விழாவுடன் தெய்வத் திருமண நிகழ்ச்சி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அலங்காரவள்ளி- சவுந்திரநாயகி அம்பாளுக்கும் தெய்வ திருமண விழா, இன்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நால்வர் அரங்கில் நடைபெற்றது. இதையொட்டி ஹோமம் வளர்க்கப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க திருமணத்திற்கான தாலியை தேங்காய் பழத்துடன் இருந்த தாம்பூலத்தட்டில் வைத்து பக்தர்களிடம் காண்பித்தனர். அதனை பக்தர்கள் தொட்டு வணங்கினர். தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி, அலங்காரவள்ளி- சவுந்திரநாயகி அம்பாளுக்கு திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் அணிவித்தனர். அப்போது பக்தர்கள் ரோஜாப்பூ, மல்லிகை உள்ளிட்ட பூக்களை மணக்கோலத்தில் இருந்த சுவாமி மீது துாவி மகிழ்ந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு மாலை மாற்றும் உற்சவம் மகா தீபாராதனை, கற்பூர ஆரத்தி, பஞ்ச கற்பூர ஆரத்தி, காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மணக்கோலத்தில் இருந்த சுவாமியை தரிசனம் செய்தனர்.