கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 27ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.
கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 27ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.;
கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 27ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் ரோடு அண்ணா சாலை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா,விழா குழு தலைவர் வழக்கறிஞர் ராஜீ தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிரஸ்டின் தலைவர் பாலாறு,செயலாளர் முத்துகிருஷ்ணன் , பொருளாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக வேள்வியில் மகா மூர்த்தி ஹோமம் மற்றும் மகா அபிஷேகம் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.