சத்தியமங்கலம் அரசு மகளிர் பள்ளியில் 276 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

சத்தியமங்கலம் அரசு மகளிர் பள்ளியில் 276 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Update: 2024-08-23 09:59 GMT
சத்தியமங்கலம் அரசு மகளிர் பள்ளியில் 276 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவுக்கு அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமை தாங்கி, 276 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஷிலாராணி முன்னிலை வகித்தார். விழாவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜா, அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் செந்தில்நாதன், பேரூராட்சி உறுப்பினர்கள் ஜெயராஜ், சங்கீதா கந்தசாமி, ராஜலட்சுமி,நவீன் மற்றும் மாவட்ட பிரதிநிதி துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News