வத்திராயிருப்பு பகுதியில் மலைவாழ் மக்கள் 29 பேருக்கு பிறப்பு சான்றிதழை சப் கலெக்டர் வழங்கினார் ....*

வத்திராயிருப்பு பகுதியில் மலைவாழ் மக்கள் 29 பேருக்கு பிறப்பு சான்றிதழை சப் கலெக்டர் வழங்கினார் ....*;

Update: 2025-05-15 15:04 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மலைவாழ் மக்கள் 29 பேருக்கு பிறப்பு சான்றிதழை சப் கலெக்டர் வழங்கினார் .... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான ராம்நகர் , வள்ளியம்மை நகர் , அத்திகோயில் , ஜெயந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.மலைவாழ் மக்களுடைய குழந்தைகள் கல்வியும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் என்பது தற்பொழுது அத்தியாவசியமாக தேவைப்படுகிறது . இதனை அறிந்த அதிகாரிகள் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் 18 வயதிற்குட்பட்ட 27 நபர்களுக்கும் , 18 வயதுக்கு மேற்பட்ட 2 நபர்களுக்கும் என மொத்தம் 29 மலைவாழ் மக்களுக்கு சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் பிறப்பு சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News