அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மே.29 இல் பழமார்நேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், பழமார்நேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் காளிதாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், 2025 கட்சி உறுப்பினர்கள் பதிவு பரிசீலனை செய்யப்பட்டது.. பழமார்நேரி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி வருகிற 29.05.25 அன்று பழமார்நேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய அமைப்புக் குழு உறுப்பினர் எம்.கே.சேகர், கிளைச் செயலாளர் சேவியர், செபஸ்தியார், ஜெஸ்டீன், வினோத், ரெத்தினம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பால்ராஜ், அபி ஆகியோர் கலந்து கொண்டனர்.