மாவட்டத்தில் 299.60 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவு
மாவட்டத்தில் 299.60 மில்லி மீட்டர் மழைப்பொழிவு அதிகபட்சமாக சத்திரப்பட்டி 54.60 மில்லி மீட்டர் மழை;

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் திண்டுக்கல்லில் ஒருசில இடங்களில் லேசான சாரல் மழையும். ஒரு சில இடங்களில் கான மழையும் பெய்தது திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி திண்டுக்கல்லில் 44 மில்லி மீட்டர் மழையும் காமாட்சிபுரத்தில் 23.50 மில்லி மீட்டர் மழையும் நத்தத்தில் 30.50 மில்லி மீட்டர் மழையும் நிலக்கோட்டையில் 35.20 மில்லி மீட்டர் மழையும் சத்திரப்பட்டியில் 54.60 மில்லி மீட்டர் மழையும் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் 22 மில்லி மீட்டர் மழையும் வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் 22 மில்லி மீட்டர் மழையும் பழனியில் 36 மில்லி மீட்டர் மழையும் கொடைக்கானல் ரோஸ் கார்டன் பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையும் கொடைக்கானல் பிரைன் பார்க்கில் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது அதிகபட்சமாக சத்திரப்பட்டியில் 54.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மாவட்டம் முழுவதும் 299.60 மில்லிமீட்டர் மழையும் சராசரியாக 29.96 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.