மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கு 2,999 கோடி முதல் கட்டமாக கொடுத்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்தார்.

100 நாட்களும் தற்போது 50 நாட்களாக குறைந்துள்ளது. நாங்கள் நேரடியாக டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சரிடம் இதுகுறித்து பேசிய பொழுது 2,999 கோடி மத்திய அரசு முதல் கட்டமாக கொடுத்தது.;

Update: 2025-07-15 16:57 GMT
மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கு 2,999 கோடி முதல் கட்டமாக கொடுத்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தோடு மக்களை சந்திப்பு பிரச்சாரத்தில் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி பேசுகையில், பெண்களுக்கான உரிமை தொகை ரூ 1,000 தருகிறேன் என்று அறிவித்து தராமல் இருந்த நிலையில் சட்டமன்றத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததின் காரணமாக 28 மாதங்கள் கழித்து தான் ஸ்டாலின் பெண்களுக்கான உரிமை தொகை கொடுத்தார். மீதம் 30 லட்சம் பேருக்கு, ஓட்டுக்காக தற்போது விதிமுறைகளை தளர்த்தி தருகிறேன் என்று அறிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்த்துகிறேன் என தெரிவித்து அந்த 100 நாட்களும் தற்போது 50 நாட்களாக குறைந்துள்ளது. நாங்கள் நேரடியாக டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சரிடம் இதுகுறித்து பேசிய பொழுது 2,999 கோடி மத்திய அரசு முதல் கட்டமாக கொடுத்தது. ஆக ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடிய கட்சி திமுக கட்சியும் அதன் அரசாங்கமும். கண்களில் பார்க்க முடியாத காற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக இவர்கள் சொல்கின்றனர் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வேன் என்று, நாங்கள் எதிர்க்கட்சாக இருந்தாலும் மக்கள் பிரச்சனையை மத்திய அரசுக்கு கொண்டு சென்று அதற்கு நிவாரணம் பெற்று தருகின்றோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர்கள் மோகன் ,வரகூர் அருணாசலம், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News