சேலம் மேற்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17 லட்சத்து 28 ஆயிரத்து 198 மதிப்பில் 18 மூன்று சக்கர வாகனங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, ‘சாலை விதிகளை கடைபிடித்தும் ‘ஹெல்மெட்’ அணிந்தும் வாகனங்களை ஓட்ட வேண்டும்’ என்று பேசினார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள், அருள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணகந்தன், சிட்டிவேல்முருகன், இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் அருள்மணி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.