வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன இலை வடிவத்தில் அலங்கரிக்கபட்ட வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன இலை வடிவத்தில் அலங்கரிக்கபட்ட வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன இலை வடிவத்தில் அலங்கரிக்கபட்ட வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது... விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மை, செப்புக்காசு, சூடு மண் அணிகலன்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இன்று சுமார் 1.83 மீ ஆழத்தில் சுடுமண்ணால் ஆன வடிதட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலையின் வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட வடிகட்டு முன்னோர்கள் திடப்பொருளிலிருந்து திரவ பொருளை பிரித்தெடுக்க பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துணை இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.