ஆண்டிபட்டியில் ஆட்டோ மோதியதில் பெண் உட்பட 3 பேர் காயம்
ஆட்டோ சாந்தி என்ற பெண் மீது மோதியதில் சாலை ஓரத்தில் நின்ற சீனிவாசன் மற்றும் அவரது மகன் சக்திகஸ்தன் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, அருகே ஜக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(33). இவர் தனது மகனுடன் கடைக்கு செல்வதற்காக தேனி-மதுரை நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார். அதே பகுதியில் சாந்தி(55) என்ற பெண் சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ சாந்தி என்ற பெண் மீது மோதியதில் சாலை ஓரத்தில் நின்ற சீனிவாசன் மற்றும் அவரது மகன் சக்திகஸ்தன் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.