காங்கேயத்தில் மாமிச கழிவுகளை கொட்டிய 3 பேர் மீது வழக்கு
காங்கேயத்தில் ஓட்டல் கழிவுகளை கொட்டிய 3 பேர் மீது வழக்கு -
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் வீரணம்பாளையம் ஊராட்சி பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 3 நபர்கள் வெளியூரிலிருந்து ஹோட்டலில் மீதமான குப்பைகள் மற்றும் மாமிசக் கழிவுகளை கொட்டுவதற்காக காரில் பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி எடுத்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாமிச கழிவுகளை ஏற்றி வந்த சொகுசு காரை சிறை பிடித்தனர். இது குறித்து வீரணம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பேபி @ உமா நாயகி காங்கேயம் காவல்துறை, காங்கேயம் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் மனு அளித்திருந்தனர். புகார் மனு அளித்தும் கடந்த 4 நாட்களாக காலதாமதம் ஏற்பட்டது.இந்த நிலையில் பல்வேறு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்த வேளையில் தற்போது கழிவுகளை ஊருக்குள் கொட்டியதாக சொகுசு காரில் வந்த அரசு, ராஜீவ் காந்தி, மற்றும் காளீஸ்வரன் ஆகிய 3 நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.