பேருந்து பயணத்தின் போது லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்கம் மாயம். பாதிக்கப்பட்டவர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார்

பேருந்து பயணத்தின் போது லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்கம் மாயம். பாதிக்கப்பட்டவர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார்

Update: 2024-09-25 04:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பேருந்து பயணத்தின் போது லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்கம் மாயம். பாதிக்கப்பட்டவர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் சந்தோஷ் குமார் வயது 29. இவர் பழனியில் இருந்து திருப்பூர் பேருந்தில் ஏறி பெங்களூரு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்து தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது காதப்புள்ளபட்டி அருகே பேருந்து சென்ற போது தான் கொண்டு வந்திருந்த ஆப்பிள் லேப்டாப்பை எடுத்து பயன்படுத்தலாம் என பார்த்தபோது பேருந்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்த பேக் காணாமல் போனது தெரியவந்தது. இதை எடுத்து கூச்சலிட்ட சந்தோஷ் குமார் உடனடியாக பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். சந்தோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் பேருந்து லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஆப்பிள் லேப்டாப் மற்றும் 3 கிராம் எடையுள்ள மோதிரம் ஒன்றையும் அந்த பேக்கில் வைத்திருந்ததாகவும் இவர் தனது நண்பர்களுடன் பழனியில் இருந்து பெங்களூர் செல்வதற்காக சென்று கொண்டு இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்து ஆப்பிள் லேப்டாப் மற்றும் 3 கிராம் தங்க மோதிரம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News