சத்தி கெஜலட்டி தா்கா சந்தனக்கூடு உரூஸ் 3 நாள் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

சத்தி கெஜலட்டி தா்கா சந்தனக்கூடு உரூஸ் 3 நாள் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

Update: 2024-09-30 09:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தி கெஜலட்டி தா்கா சந்தனக்கூடு உரூஸ் 3 நாள் திருவிழா விமர்சையாக நடைபெற்றது சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெஜலட்டி பகுதியில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான தா்காவில் சந்தனக் கூடு உரூஸ் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். திப்புசுல்தான் தனது ஆட்சிக் காலத்தில் பவானிசாகா் வனத்தில் கெஜலட்டி என்ற இடத்தில் தா்கா கட்டினாா். அவா் கட்டியதற்கு நினைவாக அவரது உருவப் படம் பொறித்த கல்வெட்டு தா்காவில் இன்றும் காணப்படுகிறது. அடா்ந்த வனப் பகுதியில் மாயாற்றை ஒட்டி 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கெஞ்ஜலே அா்ஷ் வலியுல்லா தா்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த சந்தனக்கூடு திருவிழா புனரமைப்பு பணி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் புதுப்பொலிவுடன் காணப்படும் தா்காவில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனைத் தொடா்ந்து 28/09 | 2024 கந்தூரி விருந்து நிகழ்ச்சியும், 29/09/ 2024 ஞாயிற்று கிழமை சந்தன உரூஸ் நிகழ்வும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. வனப்பகுதியொட்டி நடைபெற்றதால் வனத்துறையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Similar News