நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் சாதனைப் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு!

நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டனர். 3 ஆயிரம் மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொடர்ந்து 30 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர்.

Update: 2024-10-03 12:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திரா, மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் நலச்சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சிலம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார்.நேரு யுவ கேந்திரா கணக்காளர் வள்ளுவன் முன்னிலை வகித்தார்.நேரு யுவ கேந்திரா மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் தில்லை சிவக்குமார்,ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மு.ஆ.உதயகுமார் ஆகியோர் சிலம்பம் போட்டியை துவக்கி வைத்து பேசினார்கள். நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டனர். 3 ஆயிரம் மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொடர்ந்து 30 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். சிறப்பாக சிலம்பம் சுழற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் சந்துரு, மாரிமுத்து, பொருளாளர் சீனிவாசன், துணை செயலாளர் சங்கர், ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், போட்டி இயக்குனர் முரளிதரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News