ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு நகர மன்ற கூட்டத்தில் இருந்து 3 கவுன்சிலர்கள் வெளிநடப்பு..

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு நகர மன்ற கூட்டத்தில் இருந்து 3 கவுன்சிலர்கள் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்

Update: 2024-10-24 13:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தற்போது செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்போது செயல்படும் புதிய பேருந்து நிலையம் ஆனது நகர் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு பேருந்து நிலையம் இடம் மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.பேருந்து நிலையம் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர், கட்சியினர் என பலர் பல கட்டங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் இன்று ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் 27 வார்டு கவுன்சிலர்களுடன் நகர மன்ற கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்தில் 24 திமுக கவுன்சிலர்கள்,2அதிமுக கவுன்சிலர்கள், 1சுயேச்சை கவுன்சிலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இருந்து அதிமுக 1வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி மற்றும் அதிமுக 10வது வார்டு ஆராயி மற்றும் சுயேட்சை 12 வது வார்டு சசிரேகா ஆகிய 3 கவுன்சிலர்களும் நகரமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பில் ஈடுபட்ட கவுன்சிலர்களுக்கு தனியார் அமைப்பினர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக வரவேற்கும் விதமாக பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.பின்னர் 2 அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை மனுக்களை வைத்து படி புதிய பேருந்து நிலையம் இடம் மாற்றத்தை ரத்து செய்யக் கோரி கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநடப்பில் ஈடுபட்ட 3 கவுன்சிலர்களும் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது...

Similar News