திருச்சி: கோஷ்டி மோதல்; 3 பேர் கைது
தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பிலும் 5 பேர் மீது வழக்குப்பதிந்து, 3 பேர் கைது;
திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் அரவிந்த் (26). இவர் தனது நண்பர் களுடன் கல்மந்தை காலனி பகுதியில் கபடி விளையாடுவதற்காக ஒரு மைதானத்தை தயார் செய்தனர். அப்போது விஸ்வாஸ்நகரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர்கள் அதே பகுதியில் வாலி பால் விளையாடுவதற்காக கம்பங்களை நட்டதாக கூறப்படுகிறது. இத னால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநி லையில் 19-ந் தேதி இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. இது தொடர்பாக தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் இரு தரப்பிலும் 5 பேர் மீது வழக்குப்பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.