வாணியம்பாடி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 பேர் படுகாயம்*

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 பேர் படுகாயம்*;

Update: 2025-02-22 09:00 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 பேர் படுகாயம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் கிராமத்தில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கம் கார் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மீட்ட அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதனை தொடர்ந்நு இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் இவ விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்ட போது, காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் நவி மும்பையை சேர்ந்த சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் அதிகாரிகள் (GST OFFICERS) மாஸ் இந்திரா, நீலேஷ் பிரகாஷ், சைமன் பிரதிஷ்டார் ஆகியோர் என்பதும், இவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் (CMC) சிகிச்சைக்காக வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது, என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, மேலும் இந்தவிபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News