புத்தேரியில் திமுக நிர்வாகி மீது தாக்கு 3 பேர் மீது வழக்கு

வடசேரி;

Update: 2025-02-25 13:45 GMT
குமரி மாவட்டம் புத்தேரி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (48).  முன்னாள் ஊராட்சி தலைவர்.  திமுகவை சேர்ந்த இவர்  குமரி கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளராக தற்போது உள்ளார். அந்த பகுதியில் இரட்சண்ய சேனை போதகரிடம் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதை கண்ணன் கண்டித்துள்ளார்.      இதனால்  ஆத்திரமடைந்த புத்தேரி பகுதியை சேர்ந்த சோனு (28)அந்தோணி (32) ரோஹித் சோகர் (25) ஆகியோர் நேற்று கண்ணனை வழி மறித்து கம்பியால் தாக்கினார். இதில் அவருக்கு உடலில் பல பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.        அவர் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட  மூன்று பேர் மீதும் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News