கன்னியாகுமரி அருகே உள்ள அழிக்கால் பிள்ளைத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜிலின் ரோமாரியோ. இவருக்கு ஒரு பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அஜிலின் ரோமாரியோ வீட்டைவிட்டு வெளியேறி மாணவியுடன் தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந் துள்ளார். அப்போது ஒரு நாள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜிலின் ரோமா ரியோவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் பெற்றோர் மாணவியின் தந்தை முத்துகுமார், தாய் ராமலெட்சுமி சித்தி நித்யா ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதற்கிடையே அஜிலின் ரோமாரியோவை காண வில்லை எனக்கூறி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இந்தநிலையில் அவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய் திருப்பதும் குறிப்பிடத்தக்கது.