புகையிலை விற்ற 3 பேர் கைது

இரணியல்;

Update: 2025-03-29 06:38 GMT
புகையிலை விற்ற 3 பேர் கைது
  • whatsapp icon
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்கிருஷ்ணன், விஜயகுமார், தலைமை காவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட போலீசார் பரசேரி, ஆளுர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பரசேரி, ஆளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 3 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடைகளில் இருந்த அருண்குமார் (40), அஜித் (38), சேகர் (36) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Similar News