இடப்பிரச்சனையில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு: உறவினர்கள் மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியல்;

Update: 2025-04-03 17:16 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகே ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தை திருக்குமார் (50),. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தீர்க்கரசு (54),. விவசாயி. தீர்க்கரசு தனது சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்துக்கொண்டு, திருக்குமாரிடம் 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டார். ஆனால் அவர் கிரையம் செய்து வாங்கிக்கொண்டு பணத்தை திருப்பித் தரும் போது, நிலத்தை தருவதாக கூறியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு, தீர்க்கரசு வட்டியுடன், திருக்குமாரிடம் பணத்தை கொடுத்து விட்டு, நிலத்தை கேட்டுள்ளளார். ஆனால், நிலத்தை தர முடியாது என திருக்குமார் கூறிதால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.  கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, தீர்க்கரசு இடம் பிரச்சனை தொடர்பாக, திருக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார். இது குறித்து திருக்குமார் பாப்பாநாடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தீர்க்கரசு கைது செய்யப்பட்டார். தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு  ஜாமீனில் சிறையில் இருந்து ஊருக்கு வந்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை, தீர்க்கரசு ஊரில் இருந்து டூ வீலரில் பாப்பாநாடு கடை வீதிக்கு வந்த போது, தீர்க்கரசுவை வழிமறித்த நான்கு பேர், கை, முகம், கால் என ஐந்து இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு காவல்துறையினர், தீர்க்கரசுவை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தீர்க்கரசு உறவினர்கள் பாப்பாநாடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி,  தீர்க்கரசை வெட்டிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Similar News