காங்கேயத்தில் பெயிண்டரை தாக்கிய 3 பேர் கைது
காங்கேயத்தில் பெயிண்டரை தாக்கிய 3 பேர் காங்கேயம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்;
காங்கேயம்-திருப்பூர் சாலையில் காமராஜர் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் வேலை பார்க்கும் மணிகண்டன் என்கிற மணிஷ் (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னிமலை சாலையை சேர்ந்த சஞ்சய் (21) என்பவரின் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய ரூ.4500 கேட்டு மணிகண்டனை, காரின் உரிமையாளர் சஞ்சய் அவரது நண்பர்கள் பாலசுப் பிரமணி (27), ரஞ்சித் (30) ஆகியோருடன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டன் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சஞ்சய், பாலசுப்பிரமணி, ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர்.