ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண்கள் உட்பட 3 பேர் கைது
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண்கள் உட்பட 3 பேர் கைது 26 கிலோ கஞ்சா பறிமுதல்;

திருப்பூர் ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலைய பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது டெல்லியில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த சர்ஜிரோ மோகிட்(வயது 44), ராஜ்ஸ்ரீ(35) மற்றும் பாக்யஸ்ரீ(42) என்பதும், அவர்களிடம் 26 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவர்களை மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.