மீனவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

குளச்சல்;

Update: 2025-04-21 07:36 GMT
குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் மரிய ஜெரால்டு ராஜ் (58). மீனவர். இவர் நேற்று இரவு கோவிலுக்கு சென்று விட்டு தனது அண்ணன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு அவரது அண்ணன் மகளை பக்கத்து வீட்டை சேர்ந்த பெஞ்சமின், அவருடைய மனைவி லிசி மற்றும் சுபா ஆகியோர் திட்டிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த மரிய ஜெரால்டு ராஜ் இதை தட்டி கேட்டுள்ளார்.       இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும்  சேர்ந்து பிளாஸ்டிக் பைப்பால் மரிய ஜொரால்டு ராஜை தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை அடுத்து அவரை அக்கம் பக்கத்தினர்  மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  சேர்த்தனர்.     இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் பெஞ்சமின், லிசி மற்றும் சுபா ஆகிய மூன்று பேர்  மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News