உத்தனப்பள்ளி 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி
உத்தனப்பள்ளி 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி;
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம் கிராமத்தில் பிகார் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18) தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்வம் அன்று கட்டுமான பணியில் ஈடுபட்டபோது 3-வது மாடியிலிருந்து எதிர்பாரவிதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சோ்த்தனா். அங்கு அவா் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.