குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இரவிபுத்தன் துறை குருசடிவளாகம் பகுதி சேர்ந்தவர் கபிரியேல் (19). சம்பவதினம் இரவு 9.30 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அம்மாவை ஏன் தவறாக பேசினீர்கள்? என்று கேட்டு கையில் வைத்திருந்த வெட்டு த்தியால் கபரியேலை வெட்டியுள்ளார். தொடர்ந்து சிறுவனுடன் வந்த ஷாஜன் (27),சிலுவையப்பன் (71) ஆகியோர் கபிரியே லை கையால் தாக்கி விட்டு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்பந்தமான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.