யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது
தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது;
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தத்தை விற்பனை செய்ய முற்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வனத்துறை தனிப்படை பிரிவினர் வியாபாரி போல் பேசி தாண்டிக்குடி மங்களம்கொம்பையைச் சேர்ந்த சுருளிவேல்(38), பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(44) தாண்டிக்குடி பட்லங்காட்டை சேர்ந்த பாஸ்கரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த யானைத் தந்தத்தை பறிமுதல் எங்கு வாங்கினர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.