ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து 3 பேர் காயம்.

ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து 3 பேர் காயம்.;

Update: 2025-08-27 09:27 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து 3 பேர் காயம். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஹரிநாத் என்பவர் தனது நண்பருடன், திருமண நிகழ்ச்சியிற்காக சென்னை சென்னை இன்று (27) அதிகாலை காரில் வீடு திரும்பிய போது, திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அதே சாலையில் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கிச்சென்ற கண்டெய்னர் லாரியின் பின்பக்கம் மோதி சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், உடனடியாக அவர்களை மீட்ட அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்து இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Similar News