நாகர்கோவில் : கஞ்சா கடத்திய 3 பேர் கைது

ஒன்றரை கிலோ பறிதல்;

Update: 2025-09-13 03:36 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் மேலும் விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கமல்யூசுப் (27),மாதவலாயம், மைதீன்புரம் பகுதியை சேர்ந்த ஷாஜகான்(22),சிறமடம், ஞாலம் பகுதியை சேர்ந்த புரூஸ்லீ(35) ஆகிய மூன்று பேர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் பைக் பறிமுதல் அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News