கோவை: சுகுணா ஃபுட்ஸில் வருமான வரி சோதனை – 3ம் நாளாக தொடர்ந்தது !

சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் தொடரும் வருமானவரித்துறை சோதனை.;

Update: 2025-09-26 04:24 GMT
திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக செயல்படும் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகாரின் பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் கோவையில் உள்ள அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் அலுவலகங்களில் மூன்றாம் நாளாக நேற்று சோதனை நடத்தினர். இதற்கு முன்னதாக, உடுமலைப்பேட்டை, கணபதிபாளையம், வரதராஜபுரம் மற்றும் நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள கோழி தீவன உற்பத்தி மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று இரண்டு தனி குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News