கோவை: தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

வீட்டு முன் விளையாடிய போது மூடப்படாத தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை.;

Update: 2025-10-23 09:05 GMT
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே கோட்டூர் பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிய 3 வயது ராகிணி என்ற பெண் குழந்தை, தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. கயிறு தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்க்கும் சதீஷ்கோல்–பிட்டுகோல் தம்பதியரின் மகளான ராகிணி, திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து தேடப்பட்டபோது, மூடப்படாத தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News