மாற்றுத்திறனாளிகள் டிச.3ல் போராட்டம் அறிவிப்பு

குமாரபாளையம் மாற்றுத்திறனாளிகள் டிச.3ல் போராட்டம் அறிவித்துள்ளனர்.;

Update: 2025-11-21 13:44 GMT
குமாரபாளையம் மாற்றுத்திறனாளிகள் டிச.3ல் போராட்டம் அறிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது: உதவித் தொகை விண்ணப்பம் செய்து இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை. இதை கண்டித்தும், 27 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், குடும்ப அட்டை வழங்க வேண்டியும், தாயுமானவர் திட்டம் மூலம் சனி அல்லது ஞாயிறு நாட்களில் ரேசன் பொருட்கள் வழங்க வேண்டியும், கைரேகை விழாத நபர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும், இலவச பெட்ரோல் வாகனம் விரைவில் வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களில் சாய்தளம் அமைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

Similar News