மீஞ்சூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

மீஞ்சூர் பேரூராட்சி 15 வது வார்டில சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் கபடி டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடு;

Update: 2025-12-17 09:20 GMT
மீஞ்சூர் பேரூராட்சியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி பூமி பூஜையை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி 15 வது வார்டில சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் கபடி டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் பூமி பூஜையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்து அடிக்கல் நட்டு வைத்தார். இதில் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர் 15 வது வார்டு உறுப்பினர் பரிமளா அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Similar News