வெள்ளியணை அருகே சட்டவிரோத மது விற்பனை. 30 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

வெள்ளியணை அருகே சட்டவிரோத மது விற்பனை. 30 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

Update: 2025-01-02 12:47 GMT
வெள்ளியணை அருகே சட்டவிரோத மது விற்பனை. 30 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 1-ம் தேதி காலை 11 மணியளவில், வெள்ளியணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளியணையில் இருந்து பிச்சம்பட்டி செல்லும் சாலை அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சந்திரசேகர் வயது 55 என்பவர் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 30- குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News