வேப்பூர், கோமங்கலம், மேமாத்தூர் பகுதியில் ஜன.30 ந் தேதி மின் நிறுத்தம்

திட்டக்குடி மின்சார வாரிய செயற்பொறியாளர் தகவல்;

Update: 2025-01-29 16:47 GMT
திட்டக்குடி கோட்ட  மின்சார வாரிய செயற்பொறியாளர் கரிகால் சோழன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேப்பூர் துணை மின் நிலையம் மற்றும் கோமங்கலம், மேமாத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வண்ணாத்தூர். சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலூர், கோமங்கலம். மணவாளநல்லூர், மணலூர், தொரவளுர், பரவளுர், கச்சிபெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 30ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News