ஆற்காடு:காரில் கடத்திய 30 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்திய 30 கிலோ கஞ்சா பறிமுதல்;

Update: 2025-04-01 05:17 GMT
ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தியபோது அதனை ஓட்டிவந்த நபர் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரனை செய்தனர். அதில் அவர் ஆற்காடு தோப்புகானா கனகசபாபதி தெருவை சேர்ந்த குமரேசன் (வயது 28) என்பதும், பக்கெட்டுகளில் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 30 கிலோ கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News